ராஜகிரிய மெத வெலிக்கட வீதியிலுள்ள வீடொன்றில் இயங்கிவரும் தற்காலிக ஆடைத் தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.