முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் இன்று (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் ஃபோ நிறுவனத்திற்கு முன்னாள் செயலாளர் அசாத் மவ்லானா வழங்கிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட காணொளியில், முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கும், ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொடர்பு பற்றிய தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
குறித்த காணொளியில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது