முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய சொகுசு ஜீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் இன்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.