14ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலில் பூசிய மை இன்னும் முழுமையாக அழியாமல் இருப்பதால் , இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும்.
அத்துடன், இந்த வருட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.