சிறுவன் ஒருவனுக்கு பலவந்தமாக கசிப்பு அருந்த கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கஹதுடுவ சிங்ககம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு அருந்தி சுகயீனமுற்ற குறித்த 09 வயது சிறுவன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சிறுவனின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்