கொழும்பு லேக்ஹவுஸ் வளாகத்தில் மோட்டார் வாகனமொன்று தடுப்பு சுவரொன்றின் மீது மோதியுள்ளது. இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதிக்கு நித்திரை ஏற்ப்பட்டமையே விபத்திற்கு காரணமென தெரியவந்துள்ளது.
விபத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவரின் ஒரு பகுதிக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.