தந்தை செலுத்திய ஜீப் வண்டியில் சிக்குண்டு 3 வயது குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் மருதானையில் பதிவாகியுள்ளது. ரயில் ஊழியர் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது. விபத்து தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சேவையாற்றும் 36 வயதுடைய குழந்தையின் தந்தை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.