சிறுவர்களுக்கிடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த காய்ச்சல் நிலைமை மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.