அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால் ட்ரம்ப் ஐரோப்பாவில் அமைதியை ஏற்படுத்த ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் சான்ஸலர் ஒலாப் ஸ்கொல்சுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ட்ரம்ப் இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது இராஜதந்திர உரையாடலாக இது அமைந்துள்ளது.
அமெரிக்க – ஜேர்மன் உறவுகள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.