நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்ணமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.