ஹெயிட்டி பிரதமர் கெரீ கொனீல் குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு நிர்வாக பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 3ம் திகதி அவர் பிரதமராக பதவியேற்றார்.
குறித்த பேதரவையின் 9 உறுப்பினர்களில் 8 பேரின் கையொப்பத்துடன் அவரை பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கெரீ கொனீலுக்கு பதிலாக பிரபல வர்த்தகரான ஹெயிட்டியின் செனட் உறுப்பினர் எலிக்ஸ் டிடியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹெயிட்டின் பாதுகாப்பை வழமை நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் கெரீ கொனீல் இந்த ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் அவர் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னை பதவி நீக்கியமை சட்டவிரோதமானது என கெரீ கொனீல் தெரிவித்துள்ளார்.