பழைய அரசியல் கலாசாரங்களை மாற்றி, வடக்கு மக்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு அணைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து இனங்களும் ஒரே கொடியின் கீழ் நல்லிணக்கத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.