வெலிகம, மிரிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் கணக்காளர் போலியான அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
காலி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.