சுகாதார அதிகாரிகள் என கூறி நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது பிற வழிகளில் நிதி கோருவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் என அறிவித்து நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.