பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
அதற்கமைய, நாளை முதல் பொதுத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த காலப்பகுதியில் எந்தவொரு தேர்தல் பிரசார பணிகளிலும் வேட்பாளர்கள் ஈடுபட முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனை மீறுவது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவதற்கு சமன் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.