எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் கடந்த 8ஆம் திகதி வரை பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,348 ஆக பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் 1,861 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.