கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் என மொத்தம் 55 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
இந்த நிதியால் அரசுக்கு 2 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவித்துள்ளது.