இலங்கையை தூய்மையான நாடாக மாற்றும் நோக்கில் ‘Clean Sri Lanka’ என்ற விசேட செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பொலிஸ் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் பெரேரா, கொழும்பு தெற்கு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI துஷ்மந்த ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பற்கேற்றிருந்தனர்.