தென் சூடானில் ஏற்ப்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக 370,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் தென் சூடானில் மலேரியா தாக்கமும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் அதிக இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும் நாடுகளில் தென் சூடான் முதலில் உள்ளதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பல தசாப்தங்களாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக அந்நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென் சூடானின் பல பகுதிகளில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுமார் 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.