ஸ்கொட்லாந்தின் தென் பகுதியிவுள்ள கலங்கரை விளக்கத்திற்கு அண்மையில் தகவலொன்று எழுதப்பட்ட காகிதம் அடங்கிய போத்தலொன்றை மீட்டுள்ளனர். 132 வருடங்களுக்கு முன்னர் இந்த காகித செய்தி எழுதப்பட்டுள்ளதாக அதனை அடையாளம் கண்ட, பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் கிடைக்கப்பெறும் செய்தியாக இதனை கூற முடியும். மயில் இறகில் மை கொண்டு இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது. 1892ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி காகித செய்தி எழுதப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 அங்குலம் கொண்ட இந்த போத்தல் ரோஸ் ரசல் என்ற பொறியியலாளரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை இயந்திர சோதனைக்கு உட்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே அவருக்கு குறித்த போத்தல் கிடைத்துள்ளது.
போத்தலில் இருந்த காகித செய்தியானது பொறியிலாளர்களுக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். பணி சார்ந்த விடயங்கள் அந்த செய்தியில் எழுதப்பட்டிருந்ததாக ரோஸ் ரசல் தெரிவித்துள்ளார்.