வரையறுக்கப்பட்ட திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியாகும் சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
திரிபோஷா நிறுவனத்தை கலைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் பயனுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.