தாமரை கோபுரத்தில் நேற்றைய தினம் (08) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.