அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர் நோக்கி புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் ஏற்ப்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல் – 604 என்ற விமானம் இன்று அதிகாலை 12.30க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி புறப்படவிருநதது.
இந்நிலையில் ஏற்ப்பட்ட அவசர நிலைமை விமானத்திலிருந்த பயணிகள் மற்றுமொரு விமானத்திற்கு மாற்றப்பட்டனர். குறிப்பிட்ட பயணிகள் மாத்திரமே இவ்வாறு வேறு விமானத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏனையவர்கள் நாளை அதிகாலை 12.30க்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கி அழைத்துச் செல்லப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பிரதானி தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.