பூமியின் வட துருவத்திற்கு நெருக்கமான கனடாவிலுள்ள சர்ச்சில் எனும் சிறிய நகரத்தில் ஒரு வருடத்தில் 300 நாட்களும் வானம் ஒளி வண்ணமாக மிக அழகாகக் காட்சி அளிக்கிறது.
குறிப்பாக, குளிர்கால இரவுகளில் மிகவும் அற்புதமான காட்சிகள் நிகழ்கின்றன. பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்; வானம் தெளிவாக இருக்கும்.
சர்ச்சில் நகரம் போலார் பியர் எனப்படும் துருவக் கரடிகளுக்காகவும் புகழ்பெற்றது. ‘துருவ கரடிகளின் தலைநகரம்’ என்றும் பெயர் பெற்றுள்ளது.
இந்த பகுதியில்தான் உலகின் மிகப்பெரிய பெலுகா திமிங்கலங்கள் உள்ளன. குறிப்பிட்ட பருவத்தில் அவை சர்ச்சில் முகத்துவாரத்திற்கு வருகின்றன.
ஒருமுறை சென்றால் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத பல அனுபவங்களைக் கொடுக்க கூடியது சர்ச்சில் நகரம் என்றால் மிகையாகாது.