பணமோசடியில் ஈடுபட்ட 59 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.