கண்டி டி. எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி நேற்று இடிந்து வீழ்ந்ததில் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் அங்குள்ள ஏனைய வகுப்பறைகளும் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அபாயம் குறித்து மத்திய மாகாண ஆளுநர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படும் என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.