கடும் மழை காரணமாக கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தில் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா ஒரு மீற்றருக்கு திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு ஒரு வான்கதவில் இருந்து வினாடிக்கு சுமார் 140 மீற்றர் நீர் திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை தெதுரு ஓயா, மகா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா நீரோடைகளின் நீர் மட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நீரோடைகளை சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.