போதைப்பொருளை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அணுகுமுறைகளுடன் கூடிய தூய்மையான இலங்கையை கட்டியெழுப்ப தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.