சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் விளாசிய முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.
முன்னதாக பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசியமை குறிப்பிடத்தக்கது.