சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் இன்று (09) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இரு அணிகளுக்கிடையில் இரு போட்டிகள் கொண்ட 20 க்கு 20 சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச தொடர் என்பன நடைபெறவுள்ளன.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இறுதியாக கடந்த 2019 செப்டம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாடியது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் தொடராக இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து நாளை (10) இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 23 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 13 போட்டிகளிலும், இலங்கை அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவற்றதாக அமைந்தது.