இந்த வருடத்தில் முதல் 10 மாதங்களில் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீனாவினால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளை புனரமைப்பதற்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
மேலும், அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீனாவிலிருந்து கிடைக்கவுள்ள 10 மில்லியன் பெறுமதியான உதவி பொருட்கள் முறையான கணக்குப்பதிவுக்குப் பிறகு விநியோகிக்கப்படவுள்ளன.