அரசியல் அனுபவம் வாய்ந்த முன்னாள் ஜனாதிபதிகள் பத்து பேரை குறிப்பிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடுத்துள்ளார்.
கேகாலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலை மேம்படுத்தவும் வலுவான அரசாங்கத்தை கட்டியெழுப்பவும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.