பிரமிட் திட்டம் மூலம் நிதி நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்ட 1,800 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.