அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 35 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
இதற்கமைய 164 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 எனும் அடிப்படையில் சமநிலையில் உள்ளது.