றாகம பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் 150,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
றாகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு சிறுமி ஒருவருக்கு அனுமதி வழங்குவதற்காக பாடசாலையின் காரியாலயத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.