ரஃபேல் சூறாவளி காரணமாக கியூபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணித்தியாலத்துக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தல் வீசிய காற்று காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், ரஃபேல் தாக்கத்தினால் கியூபாவில் உடனடியாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மேலும் ரஃபேல் சூறாவளி 2 ஆம் வகை புயலாக வலுவிழந்து, வளைகுடாவில் மெக்ஸிகோவை நோக்கி நகர்ந்துள்ளது.
இதனால், அங்கு வரும் நாட்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 மில்லியன் மக்களை இருளில் மூழ்கடித்த ரஃபேல் சூறாவளி நாட்டின் மின் கட்டத்தைத் தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு, வியாழன் அன்று தீவின் கிழக்குப் பகுதிக்கு மின்சாரத்தை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளதாக கியூபா தகவல்கள் தெரிவிக்கின்றன.