முந்தளம்-மங்களஎலிய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தளம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 56 வயதுடைய மங்களஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.