பாதுக்க – துன்னான பகுதியில் வடிகான் ஒன்றில் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ருக்மலே, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மகளின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு பஸ்ஸில் பயணம் செய்த பெண், அன்றைய தினம் மாலை வரை மகளின் வீட்டுக்கு செல்லாத நிலையில், அவரது மகனால் கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், துன்னான பகுதியில் வீதியில் சென்ற ஒருவரால் பெண்ணின் சடலம் தொடர்பில், பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சடலம் நீதவான் விசாரணைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.