எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக் கூடாது. மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது. வீடு வீடாகச் செல்ல முடியாது என அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு செயற்படுவது சட்டவிரோத செயலாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.