வந்தாறுமூலை, உப்போடை பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (07) உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஏ.றமீஸகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.