குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தன் மீதான கைது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இன்று முறைப்பாடளித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 5 வருட விசாரணையின் போது தானும் தனது மனைவியும் பல முறைப்பாடுகளை தாக்கல் செய்திருந்தோம். ஆனால் அதற்கான நீதி கிடைக்கவில்லை.
தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே இன்று முறைப்பாடளித்தேன்.
அரசியல் நோக்கத்திற்காகவும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கிலும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காகவே இன்று முறைப்பாடு செய்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.