இலங்கைக்கான துருக்கி தூதுவர் Semih Lütfü Turgut கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று சந்தித்தார்.
சந்திப்பின்போது துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.