நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, காலி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (08) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட அராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.