இணையத்தில் அதிகரிக்கும் நிதி மோசடிகள் குறித்து அறிவிப்பதற்கு விசேட மின்னஞ்சல் முகவரியொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இணைய நிதி மோசடிக்கு முகம்கொடுக்க நேரிட்டால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உடனடியாக முறைப்பாடு செய்யலாம்.
இதற்கமைய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.