கடவுச்சீட்டு விவகாரத்தில் நெருக்கடி ஏற்படுவதற்கு 10 காரணிகளை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் விசேட அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு நெருக்கடி தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் வெளியிடப்படும் அறிக்கைகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், திணைக்களத்தின் உயர் நிர்வாகம் வழங்கிய போலியான தகவல்கள் ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.