குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தொடர்மாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு சீனா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைய 1996 குடியிருப்புகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் வசிக்கும் மொரட்டுவை, கொட்டாவ, தெமட்டகொடை, மஹரகம மற்றும் பேலியகொடை உள்ளிட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
சீன அரசாங்கம் இதற்கான உதவித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. 3 கட்டங்களாக திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கென 8 நிர்மாணத் துறையினரிடமிருந்து கேள்விமனுக் கோரல்கள் பெறப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இதற்கென முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.