அமைதியான முறையில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கு அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் 270 தேர்தல் கல்லூரிகளின் வாக்கைப் பெறுவதற்கு கமலா ஹாரிஸ் தவறினார். 226 தேர்தல் கல்லூரிகளிலேயே அவர் வெற்றிபெற்றார். எவ்வாறெனினும் உப ஜனாதிபதி என்ற அடிப்படையில் புதிய ஜனாதிபதி ட்ரம்பிற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் அமைதியான முறையில் அதிகாரத்தை பகிர்வதற்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்க அரசியல் யாப்பிற்கமைய ஜனவரி 20ம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரை உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் செயற்பட நேரிடும்.