பொதுத் தேர்தலுக்கு பின்னர் கொள்கை பிரகடனத்திற்கமைய பொதுமக்கள் யுகமொன்று உருவாக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
எதிர்வரும் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சக்தி பெறுமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லையெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.