பங்களாதேஷ் கிரிக்கட் வீரர் ஷகீப் அல் ஹசனின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு அந்நர்டடு நிதி புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிரிக்கட் வீரருமான ஷகீப் அல் ஹசனின் வங்கி தகவல்களை அண்மையில் குறித்த புலனாய்வு பிரிவு கோரியிருந்தது. அவரது மனைவி மற்றும் வியாபார நிறுவனங்களின் வங்கி கணக்கு விபரங்களும் பெறப்பட்டுள்ளன.
பங்குச் சந்தை மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷகீப் அல் ஹசன் தற்போது அமெரிக்காவில் அவரது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
அண்மையில் நடத்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஷகீப் இழந்தமை குறிப்பிடத்தக்கது.