பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை இதுவரை செலுத்தாதவர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பில் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கூட்டமொன்றும் இடம்பெற்றது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் , பிரதி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
தேர்தல் மத்திய நிலையத்தை அமைத்தல், வாக்கெண்ணும் பணிகள் உட்பட அரச அதிகாரிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தல் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.